சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம்,ஆத்தூர் ஊராட்சியில் உள்ள கல் பெயர்ந்த நிலையில் உள்ள சிமெண்ட் சாலையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பிரதான சாலையான சிவன் கோயில் கிழக்கு தெரு என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் சிமெண்ட் சாலை அமைத்தனர்.
ஆனால் தற்சமயம் குறிப்பிட்ட சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாகவும் மேடும் பள்ளமாகவும் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த சிமெண்ட் சாலை பக்கவாட்டில் சிமெண்ட் கல் பெயர்ந்து அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி உள்ளது அப்பகுதியில் பள்ளி வாகனங்கள் சென்று வருவதால் ஏதேனும் பேராபத்து ஏற்படுத்தும் முன்பே சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story