சிதிலமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

சிதிலமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

காஞ்சிப்பாடியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது. 

காஞ்சிப்பாடியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ளது, காஞ்சிப்பாடி ஊராட்சி. இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் இரண்டு மின்கம்பங்களும் கான்கிரீட்டுகள் சேதமடைந்து, விரிசல் அடைந்து காணப்படுகின்றன.இந்த மின்கம்பம் விழுந்தால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விவசாயிகள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story