குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்க கோரிக்கை
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சி, கூத்திரமேட்டில், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், இரு ஆண்டுகளுக்கு முன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. கிராமத்தினர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில், 5 ரூபாய் நாணயம் செலுத்தி, 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து வந்தனர். இந்நிலையில், ஒரு மாதமாக சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால், கூத்திரமேடு கிராமத்தினர் தனியார் கடைகளில் தண்ணீர் கேன் வாங்கும் நிலை உள்ளது. கோடை காலம் துவங்கியுள்ளதால், குடிநீரின் தேவை அதிகரித்துள்ளதால், குடிநீருக்காக கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூத்திரமேடு கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடிநீர் பிடிப்பதற்காக நாணயம் செலுத்தும் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இயந்திரம் வாங்குவதற்காக சென்னையில் உள்ள நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இரு நாட்களில் இயந்திரம் வந்தவுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழக்கம்போல பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story