வத்திராயிறுப்பு அருகே மழையின் காரணமாக துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் பாலம் அருகே தற்காலிக சாலை போடப்பட்டிருந்தது. மழையின் காரணமாக சாலை முழுவதும் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சேதம் அடைந்த தற்காலிக சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story