மணிமங்களம் அருகே கண்காணிப்பு கேமரா சீரமைக்க கோரிக்கை

மணிமங்களம் அருகே கண்காணிப்பு கேமரா சீரமைக்க கோரிக்கை

கண்காணிப்பு கேமரா

மணிமங்களம் அருகே பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மாநகர காவல் எல்லையில், மணிமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலைய எல்லையில் உள்ள முக்கிய சாலைகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டன.

தற்போது, இந்த கேமராக்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளது. கச்சேரி மேடுத்தெரு, மணிமங்கலம் தர்மேஸ்வரர் கோவில் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா இயங்குவதில்லை என, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இதனால், குற்றச்சம்பவம் நடந்தால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story