மின்கம்பத்தை மாற்றியமைக்க கோரிக்கை !

மின்கம்பத்தை மாற்றியமைக்க கோரிக்கை !

மின்கம்பம்

திருமழிசை பகுதியில் சாலை சீரமைக்கும் பணியின் போது சாலையின் நடுவே மின்கம்பம் அமைத்துள்ளனர். பகுதிவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை பேரூராட்சி. இங்குள்ள 10வது வார்டு பகுதியில் உள்ள காந்தி தெரு, இணைப்பு தெரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை சீரமைக்கும் பணியின் போது, மின்கம்பத்தை மாற்றியமைக்காமல் சாலையின் நடுப்பகுதியில் மின்கம்பத்தோடு பேவர் பிளாக் சாலை அமைத்துள்ளனர். இதனால், பகுதிவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர். அவசர தேவைக்கு ஆட்டோ கூட வர முடியாத நிலையில் உள்ள சாலையால், பகுதிவாசிகள் அடிப்படை மருத்துவ வசதிகளுக்கு சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுமென காந்தி தெரு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story