தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையாகும். தமிழகத்தின் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையும் தென்மேற்கு பருவமழையும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் மேட்டூர் அணை மூலம் சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெல்டா பாசன பகுதியில் முக்கியமான சாகுபடி காலமாகவும் ஜீவாதார பருவமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய குறுவை சாகுபடி பருவம் விளங்கி வருகிறது. இதன் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம் ஆனால் கடந்த ஆண்டுகளில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததாலும் போதிய மழை பெய்யாததாலும் டெல்டா பாசனத்திற்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் அணை வறண்டு கிடக்கிறது. இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள்,கிளை வாய்க்கால்களை நவீனப்படுத்தவும் பணிகளை உடனடி தொடங்க வேண்டும் கிளை வாய்க்கால்களில் உள்ள ரெகுலேட்டர்கள் பாசன மதகுகள் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை தண்ணீர் வருவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட விளக்கம் : 1)குடமுருட்டி ஆறு தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி இருப்பதை படத்தில் காணலாம். 2)பாபநாசம் பகுதியில் வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றை படத்தில் காணலாம். 3)பாபநாசம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் மரங்களில் ஒரு இலைகள் கூட இல்லாமல் வறண்டு கிடப்பதை படத்தில் காணலாம்

Tags

Read MoreRead Less
Next Story