குமாரபாளையம் பேருந்து நிலைய கட்டுமான பணி விரைந்து முடிக்க கோரிக்கை

குமாரபாளையம் பேருந்து நிலைய கட்டுமான பணி விரைந்து முடிக்க கோரிக்கை

இட நெருக்கடி

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் இட நெருக்கடியில் தவித்து வருவதால்,  புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பஸ் ஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லாததால், டைமிங் பிரச்சனை காரணமாக, போதிய அவகாசம் இருக்கும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதி இடைப்பாடி சாலை, மீன் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் தேவூர், இடைப்பாடி, பவானி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல, போதிய இட வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க, பஸ் ஸ்டாண்ட் அருகே, பழைய சார்பதிவாளர் அலுவலகம் இருக்கும் ஜே.கே.கே. வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டால்,

யாருக்கும் எவ்வித இடையூறும் இருக்காது. பஸ் ஸ்டாண்ட் புதிய கட்டுமான பணி விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story