பூதப்பாண்டி பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியிலிருந்து திட்டுவிளை செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரண்டு இடங்களில் புதிய தரைமட்ட பாலங்கள் ரூபாய் 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. அதற்காக பூதப்பாண்டி வழியாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் துவரங்காட்டில் இருந்து திட்டுவிளை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் பூதப்பாண்டில் இருந்து வெளியூர் செல்லும் மக்களும் வெளியூர் செல்லும் மக்களும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுத்தி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பூதப்பாண்டி தோவாளை தாலுகாவின் தலை தாவரமாக விளங்குவதால் இந்த தாலுகாவுக்கு உட்பட்ட 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் குழந்தைகளின் மேல் படிப்பிற்கு தேவையான பல்வேறு சான்றுகளை வாங்குவதற்காக தினமும் பூதப்பாண்டி வர வேண்டிய நிலையில் உள்ளனர்.
அதேபோன்று தலைமை மருத்துவமனையும் பூதப்பாண்டியில் இயங்கி வருகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இன்னும் 15 நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த பாலம் பணிகளை உடனடியாக விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.