தோவாளை - தாழக்குடி இணைப்பு சாலை விரைந்து முடிக்க கோரிக்கை
எம் எல் ஏ ஆய்வு
தோவாளை - தாழக்குடி இணைப்பு சாலை விரைந்து முடிக்க கோரிக்கை . எம் எல் ஏ ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை - தாழக்குடி இணைப்புச் சாலையில் 3. 50 கோடி மதிப்பீட்டில் உப்பாத்து ஓடை என்ற பகுதியில் பாலம் மற்றும் சாலையின் இருபுறத்திலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்:- இந்த சாலையின் பாலம் மற்றும் தடுப்பு சுவர் பணிகளை தரமாகவும், சிறந்த முறையிலும் எவ்வித புகார் வராத வகையில் திறன்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிறைவேற்றிட வேண்டும். இச்சாலை தோவாளையிலிருந்து தாழக்குடி வழியாக இறச்சகுளம் மற்றும் புற பகுதிகளுக்கு செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை கடுத் தில் கொண்டு காரதாமதம் இல்லாமல் விரைவில் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார். அவருடன் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், நெடுஞ்சாலை துறை கோட்ட உதவி இயக்குனர் திருவருட்செல்வன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story