மின்விளக்கு அமைக்க வாகன ஓட்டுகள் கோரிக்கை

குமாரபாளையத்தில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் முதல் ஆலாம்பாளையம் சாலை வரையிலான பணிகள் 90 சதவீதம் முடிவு பெற்ற நிலையில் ,இன்னும் சில மாதங்களில் பணிகள் முழுமையாக முடிவு பெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அலமேடு ,ஜீவா செட் உள்ளிட்ட பகுதிகளில், அடிக்கடி விபத்துக்கள், ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவர் அடைந்து வருகின்றனர் இது குறித்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் பொழுது ஜீவா செட் ,அலமேடு உள்ளிட்ட பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் சாலையின் இரு புறமும் இருந்த மின் கம்பங்களை நெடுஞ்சாலை துறையினர் மேம்பால பணிகளுக்காக அகற்றி விட்டனர். இதன் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாத நிலை ஏற்படுகிறது .

மேலும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஒரு வழி பாதையில் எதிர் எதிர் திசையில் சென்று வருகிறது. போதிய வெளிச்சம் இன்மை காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக வருவதாலும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகள் காரணமாக உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் போர்க்கால அடிப்படையில் விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும். மின்விளக்கு வெளிச்சமில்லா பகுதிகளில் முறையான மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி, விபத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story