மணலை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

மணலை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

மணலை அப்புறப்படுத்த கோரிக்கை

மணலை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை திருக்கச்சூர், கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு சென்று வரும் வாகனங்கள், இந்த சாலையில் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. கொளத்துார் உள்ளிட்ட கல் அரவை நிலையங்களுக்கு செல்லும், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக, சாலையில் தெள்ளிமேடு, கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மணல் திட்டுக்கள் குவிந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது. வாகன ஓட்டிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் குவிந்த மணல் திட்டுக்களை தொழிலாளர்கள் ஒன்று சேர்த்தனர். ஒன்றாக சேர்ந்த மணல் குவியல்களை அப்புறப்படுத்தாமல், சாலை மையத் தடுப்பில் குவியல்களாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், காற்று அடிக்கும் போது மணல் துகள்கள் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும், சாலையில் உள்ள காய்ந்த சருகுகளும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story