பழனி கோவில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கோரிக்கை

பழனி கோவில் தீர்ப்புக்கு எதிராக  மேல்முறையீடு செய்ய கோரிக்கை

கோட்டாட்சியரிடம் மனு 

பழனி முருகன் கோவில் வழிபாடு தொடர்பான தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பழனி முருகன் கோவில் வழிபாடு உரிமை தொடர்பான வழக்கில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கமிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை, கோவில்பட்டி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், கூட்டமைப்பு பொருளாளர் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், சுற்றுச்சூழல் பொறுப்பாளர் மருதம் மாரியப்பன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் அபிராமி முருகன், ஐ.என்.டி.யு சி. ராஜசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story