சிவகாசி தாலுகா அலுவகத்தில் மனு எழுத தனி அலுவலர் நியமிக்க கோரிக்கை
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் படிவம் எழுத தனி அலுவலர் நியமிக்க கிராம மக்கள் கோரிக்கை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா அலுவலகத்தில்,ரேஷன் கார்டு, முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம்,வாரிசு,ஜாதி,
இறப்பு,வருமானம் இருப்பிடச் சான்றிதழ்,மனைப்பட்டா என பல்வேறு பிரச்னைகளுக்காக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதற்காக கிராமப் பகுதிகளிலிருந்து படிக்க தெரியாமல் வெளியூர்களில் இருந்து வரும் கிராம மக்கள் தாலுகா அலுலகத்தின் அருகே டேரா போட்டு தமது பிரச்னைகளைக் கூறி மனு எழுதி வாங்குகின்றனர்.
இதற்காக மனு எழுதுபவர்கள் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொள்கின்றனர்.தாலுகா அலுவலகத்தில் ஒரே பிரச்சனைக்காக அடிக்கடி மனுக்கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மனு எழுதிக்கொடுக்க மட்டும் ரூ.100 செலவழிக்க வேண்டியுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அலுவலகத்தில் மனு எழுதிக் கொடுக்க தாலுகா அலுவலக ஊழியர் நியமிக்கப்பட்டார்.
இந்த அலுவலர் கிராமங்களில் இருந்து வரும் மக்களுக்கு விபரம் கேட்டு மனு எழுதிக்கொடுத்து சம்பந்தப்பட்ட துறை குறித்தும் அதிகாரி குறித்தும் மனு கொடுக்க சொல்வார்.இதனால் ஏழை எளிய மக்கள் தாசில்தார் மீதும்,தாலுகா அலுவலகத்தின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.மனுக்கள் எழுதிக்கொடுக்க மீண்டும் தாலுகா அலுவலகத்தில் தனி அலுவலர் நியமிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.