பேருந்து நேரக் காப்பாளர் அறை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பேருந்து நேரக் காப்பாளர் அறை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திருப்போரூர் பேருந்து நேரக் காப்பாளர் அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்போரூர் பேருந்து நேரக் காப்பாளர் அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், தாம்பரம் ஆகிய தடங்களில், தமிழக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மற்ற தடங்களில், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருப்போரூரை சுற்றியுள்ள கிராம மக்கள், தினமும் திருப்போரூர் வந்து, அங்கிருந்து பேருந்து வாயிலாக வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஆலத்துார் சிட்கோ, சிறுசேரி சிப்காட் மற்றும் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தினமும் தொழிலாளர்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில், பேருந்துகளை ஒழுங்குபடுத்தவும், பயணியருக்கு பேருந்து புறப்படும் நேரம் குறித்து தகவல் தெரிவிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், தனித்தனியாக இரண்டு நேர காப்பாளர் அறைகள் அமைக்கப்பட்டன. அவை, பேருந்துகள் குறித்த விபரம் அறிந்து கொள்ள பயணியருக்கு உதவியாக இருந்தன. இந்நிலையில், கடந்த ஓராண்டாக, தமிழக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்து நேரக் காப்பாளர் அறை மட்டும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், பேருந்துகள் புறப்படும் நேரம், வரும் நேரம் குறித்த விபரங்களை பெற முடியாமல், பயணியர் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பயணியர் நலன் கருதி, மூடிக்கிடக்கும் தமிழக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்து நேரக் காப்பாளர் அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story