நகர்புற நலவாழ்வு மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

நகர்புற நலவாழ்வு மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

சிவகாசியில் புதியதாக கட்டபட்ட நகர்புற நலவாழ்வு மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளனர்.


சிவகாசியில் புதியதாக கட்டபட்ட நகர்புற நலவாழ்வு மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகாசி பூட்டிக்கிடக்கும் புதிய நகர்புற நலவாழ்வு மையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி 43வது வார்டில் திறப்பு விழா செய்தும் பூட்டி வைக்கப்பட்டுள்ள நகர்புற நலவாழ்வு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பொதுமக்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே சிகிச்சை அளிக்க வசதியாக நகர்புறங்களில் தமிழக அரசு நகர்புற நலவாழ்வு மையங்களை திறந்து வருகின்றது.சிவகாசி மாநகராட்சியில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக,43வது வார்டு அம்மன்கோவில்பட்டி 1வது தெருவில் புதியதாக நகர்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஜனவரியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.திறப்பு விழா கண்டு பல மாதங்களாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளன.இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட நலவாழ்வு மையம் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது.தற்போது கோடை மழை காலம் என்பதால் மழைகால நோய்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.எனவே பூட்டி வைக்கப்பட்டுள்ள நகர்புற நலவாழ்வு மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story