ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய கோரிக்கை!
ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வைத் தடுக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற இம்மன்றத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்றத்தின் நிறுவன மறைந்த க.மீனாட்சி சுந்தரத்தின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது படத்துக்கு ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் நா. சண்முகநாதன் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கூட்டத்துக்கு, மன்றத்தின் மாவட்டத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜோதிமணி, பொருளாளர் மலர்மன்னன், மாநிலச் செயற்குழு உறுப்பி அழகப்பன், மாநில சொத்துப்பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.
Next Story