சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம்

சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம்

இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை

இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய சுமூக நிலை ஏற்படவில்லை எனில் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் உள்ள தங்கும் அறைகளில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம் என தலைவர் அப்துல்கனி ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட் உரிமையாளர் சார்பில் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இதில் முக்கியமாக குறைவான அளவில் இ பாஸ் கொடுத்தால் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி வைத்திருக்கும் தாங்கள் அனைவரும் பெரிதும் பாதிப்பு அடையும் சூழல் ஏற்படும் எனவும், சீசன் வருமானத்தில் தான் தாங்கள் வாங்கிய கல்விக்கடன், வங்கிக்கடன் உள்ளிட்ட பிற அனைத்து கடன்களையும் அடைக்க முடியும் எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் கார்பார்க்கிங் வசதியை அதிகப்படுத்தி போக்குவரத்து காவலர்களை சீசனில் அதிகப்படுத்தி போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் முன்வர வேண்டும் எனவும், கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் கருதி நீதியரசர்கள் இ -பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்

வரும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இ பாஸ் முறையை ரத்து செய்ய மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து இதில் சுமூக உடன்பாடு கிடைக்கவில்லை எனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம். அதே போல உணவும் வழங்க மாட்டோம் என்றும் அனைத்து சங்கங்களையும் கூட்டி மிகப்பெரியளவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும், ஹோட்டல் அன் ரிசார்ட் அசோசியேசன் தலைவர் அப்துல் கனி ராஜா தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story