தென்காசியில் கால்நடைகளை பிடிக்க கோரிக்கை
மனு அளித்தவர்கள்
தென்காசியில் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை எழுந்துள்ளது.
தென்காசியில் வீதிகள், சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகளை அப்புறப்படுத்தக் கோரி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ஜாக் ஜமாஅத்-தின் மனிதநேயக் குழு நிா்வாகிகள் அளித்த மனு: தென்காசி நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தை விளைவிக்கும் வகையில் தெருநாய்கள், கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனா். பள்ளி மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கும், அவதிக்கும் உள்ளாகியுள்ளனா்.
எனவே, நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
Next Story