பழைய பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

பழைய பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

போக்குவரத்து நெரிசல் 

மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. மானாமதுரையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மானாமதுரை நகருக்குள் செல்ல சிரமப்படுகின்றனர்.

அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விரைவாக பிற பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.‌ பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கவேண்டுமென மானாமதுரை மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ., தமிழரசி ஏற்கனவே கன்னார் தெரு, கிருஷ்ணராஜபுரம் இடையே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதனோடு சேர்த்து கிருஷ்ணராஜபுரம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் ரயில்வே கேட் மேம்பாலம் அமைத்து அதனை மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையோடு இணைக்க நெடுஞ் சாலைத்துறை நிர்வாகத்தினர் திட்ட மதிப்பீடு தயாரித்து வருவதாக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். மானாமதுரை மக்கள் உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story