தார் ரோடு அமைக்க கோரிக்கை
தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் மலை சுற்றும் பாதைக்கு தார் சாலை அமைக்க சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் மலை சுற்றும் பாதைக்கு தார் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு மக்கள் திட்ட இயக்கம் ,ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்து கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் வி .எம் .டி. வெங்கடேசன் தலைமை தாங்கினார் . துணை தலைவர் மல்லிகா திருநாவுக்கரசு கூட்டத்தை துவக்கி வைத்தார்.
அனைவரையும் ஊராட்சி செயலாளர் சங்கர் வரவேற்றார். இக்கூட்டத்தில் முத்தாலம்மன் நகர் மற்றும் ஆத்துறை சாலையில் புதியதாக சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் மலை சுற்றும் பாதைக்கு புதிய தார் சாலை அமைக்கவும், அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் சுற்றி மாடவீதியில் புதிய சாலை அமைக்கவும், அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் எதிரில் உள்ள கூட்டுறவு கடைக்கு நிலையான புதிய கட்டிடம் அமைக்கவும், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கூட்டுறவு கடைக்கு புதிய கட்டிடம் அமைக்கவும், அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் அன்னதான திட்டம் திட்டம் செயல்படுத்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.