தஞ்சையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

தஞ்சையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

தெருநாய்கள்

தஞ்சையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாநகரில் நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு மூத்த குடிமக்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் தலைமை வகித்தார்.

நிறுவனர் புலவர் ஆதி, நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். துணைச் செயலர் துரை. துரை, கோவிந்தராஜ், துணைத் தலைவர் முத்துக்குமரன் கருத்துரையாற்றினர். எண்பது வயதை நிறைவு செய்த செயற்குழு உறுப்பினர் சுந்தரராஜன் கௌரவிக்கப்பட்டார்.

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பெ.சந்திரபோஸ், ஏ.டி. ராஜா சுப்பிரமணியன், கே.ஆர்.ஜி. காசிராஜன், பேராசிரியர் மாஸ்டர் சுரேஷ். சங்கப் பொதுச் செயலர் ஆர்.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகர எல்லைக்கு உள்பட்ட புறநகர் பகுதிகளில் நாய் தொந்தரவு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துநிலையத்துக்கு மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி. காலனி ஜெகலெட்சுமி நகர் வழியாக சென்று கொண்டிருந்த சிற்றுந்தை நாள் தோறும் குறைந்தது மூன்று முறையாவது தவறாமல்,

இயக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story