மெட்ரோ ரயிலை விம்கோ நகர் - கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க கோரிக்கை

மெட்ரோ ரயிலை விம்கோ நகர் - கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க கோரிக்கை


மெட்ரோ ரயிலை விம்கோ நகரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


மெட்ரோ ரயிலை விம்கோ நகரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை -- கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், மீஞ்சூரில், தலைவர் தீனதயாளன் தலைமையில் நடந்தது. சங்கத்தின் காப்பாளர் முனைவர் ராஜகோபால், செயலர் தனுஷ்கோடி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் பயணியர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசியவர்கள், 'இந்த வழித்தடத்தில், ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் கல்வி, சுகாதாரம், தொழில், அலுவலகம், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்காக தினமும் பயணிக்கின்றனர்.

இதனால் புறநகர் ரயில்களில் கூட்டம் அதிகமாகவும், நெரிசலுடன் பயணிக்க வேண்டி உள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், 9 பெட்டிகளுடன் உள்ளன. பயணியர் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக அனைத்து ரயில்களிலும் 12 பெட்டிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். மேலும் அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே உள்ள இருவழி பாதையை, நான்குவழியாக மாற்றம் செய்ய வேண்டும்.

கொரோனா காலத்திற்கு முன், இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும், மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும். அனைத்து விரைவு ரயில்களும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். மெட்ரோ ரயிலை விம்கோ நகரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க வேண்டும். மீஞ்சூர் அல்லது பொன்னேரியில் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story