சத்துணவு பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

சத்துணவு பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்துள்ளனர்.புதுக்கோட்டையில் நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சத்துணவு பணியாளர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு தயாரிக்க வழங்கப்படும் உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

முன்னாள் மாவட்ட தலைவர் ஏ. கோவிந்தராஜன், மாநில பொருளாளர் பி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ். அம்பிகாபதி உள்ளிட்ட வரும் பங்கேற்று பேசினர்.

Tags

Read MoreRead Less
Next Story