சிவன் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை!
சிவன் கோவில்
தூத்துக்குடி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி தினத்தன்று பொதுமக்கள் வழிபாடு செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி தினத்தன்று பொதுமக்கள் வழிபாடு செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் திருக்கோவில் செயல்அலுவலரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருடத்திற்கு ஒருமுறை வரும் சிவராத்திரி தினத்தன்று பக்தகோடிகளும், பொதுமக்களும், மகளிர்களும், மாணவ, மாணவியரும் சிவன் கோவிலுக்கு வருகை தருவார்கள். இதையொட்டி சிவன் கோவில் மண்டபத்தின் வளாகத்தில் அமர்ந்துள்ள அனைத்து பக்த கோடி பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அன்று நடக்கும் நான்கு கால பூஜைகளையும் கண்டு களிக்க தேவையான வகையில் Projector மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கழிப்பறையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். குடிநீர் குழாய்களை சரிசெய்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிதண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகள் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்ட துணை தலைவர் ஆதிநாத அழ்வார், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட துணை தலைவர் திருப்பதி வெங்கடேஷ், பக்தர்கள் மாரியப்பன், மாடசாமி, சின்னத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story