கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கோரிக்கை

மனு அளிக்க வந்த விவசாயிகள் 

நீதிமன்ற உத்தரவுப்படி கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கோரி கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தினர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து தொடங்கும் கீழ் பவானி பாசன வாய்க்கால் ஈரோடு,திருப்பூர்,கரூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் 2லட்சம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.கடந்த ஆட்சியில் 720கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்கால் கான்கிரீட் அமைக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்திற்கு ஒரு தரப்பு எதிர்ப்பும் , மற்றொரு தரப்பு ஆதரவும் என்ற நிலையில் , இரு தரப்பு விவசாயிகள் மத்தியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் முத்துச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தகோரி ஈரோடு மாவட்ட நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.

Tags

Next Story