நலவாரிய உறுப்பினர் மறுப்பதிவிற்கு ரூ.1000 வழங்க கோரிக்கை

நலவாரிய உறுப்பினர் மறுப்பதிவிற்கு ரூ.1000 வழங்க கோரிக்கை

தொழிலாளர் நல வாரியம் 

புதுக்கோட்டை தொழிலாளர் நல வாரிய ஆவணங்கள் அழிந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், உறுப்பினர்கள் மீண்டும் பதிவு செய்திட வேண்டுமானால் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1000 வழங்க வேண்டும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
புதுக்கோட்டையில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட நல வாரிய பதிவுச் சங்கங்களின் கூட்டமைப்பு நிறைவேற்றப்பட்ட விவரம்: தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் ஆவணங்கள் மற்றும் பதிவுகள் சென்னையில் அண்மையில் பெய்த மழை காரணமாக அழிந்துவிட்டதாகக் கூறி, ஆன்லைன் வழியே செய்யும் இயல்பான பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு இப்பிரச்னையில் தலையிட்டு தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் மாற்று வழிகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டும் அழிந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும்.இயலாத நிலையில் தொழிலாளர்கள் மீண்டும் தங்களுடைய ஆவணங்களைப் பதிவு செய்ய நேரிட்டால் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம், போக்குவரத்துச் செலவு, பதிவுக் கட்டணத்தை ஈடு செய்கிற வகையில் ரூ. ஆயிரம் நல வாரியத்தின் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, ஏஐடியுசி சங்கத்தின் தலைவர் கே.ஆர். தர்மராஜன் தலைமை வகித்தார். தனிப் பதிவு சங்கங்களின் நிர்வாகிகள் டேவிட், சேகர், சாந்தி, கண்ணபிரான், வசந்த பிரியா, சரஸ்வதி ராஜேந்திரன் பங்கேற்றனர். உள்ளிட்டோர்

Tags

Next Story