ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 வழங்க கோரிக்கை

மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 விலை வழங்க வேண்டும் என பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாநிலத் தலைவர் எஸ். வேல்மாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். , கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய பாஜக அரசு 9.5 சதவீதம் பிழிதிறன் உள்ள ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 5000 விலை அறிவித்து வழங்கிட வேண்டும், மாநில அரசுகள் பரிந்துரை விலையை SAP - அறிவிப்பதற்கும், லாபத்தில் பங்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், கரும்பு கட்டுப்பாடு சட்டத்தில் - 1966-ல் சட்டத்திருத்தம் செய்திட வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆன திருத்தணி கூட்டுறவு ஆலையை புனரமைத்து மேம்படுத்திட மாநில அரசு நிதி ஒதுக்கி பணிகளை துவக்கிட வேண்டும், மதுரை நேஷனல் கூட்டுறவு சர்க்கரை ஆலை மாநில அரசு அறிவித்தபடி திறந்து செயல்படுத்திட வேண்டும்,

வெட்டுக் கூலி கடுமையாக உயர்ந்துள்ளது.விவசாயிகளும் தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் வெட்டுக் கூலியை முத்தரப்பு கூட்டம் நடத்தி, வெட்டுக் கூலி தீர்மானித்து அதனை அமல்படுத்திட வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்தி செய்து மின்வாரியத்திற்கு வழங்கிய மின்சாரத்திற்கான கட்டணத்தை ரூபாய் 80 கோடி மின்வாரியத்திடம் இருந்து கூட்டுறவு நாளைக்கு மாநில அரசு பெற்றுத்தர வேண்டும், ஆரூரான், அம்பிகா, அருணாச்சலம், தரணி, சர்க்கரை ஆலைகள் தேசிய தீர்ப்பாயத்திற்கு சென்று விட்டது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் கடன் தீர்ப்பாயத்திற்கு சென்றுள்ள சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மாநில அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும், சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்திடும் சர்க்கரை விற்பனையை செய்திட மத்திய அரசு கோட்டா முறையை அமுல்படுத்துகிறது இதனால் கடந்த ஆண்டு உற்பத்தி செய்த சர்க்கரை ஆலை இன்று வரை விற்பனை செய்திட இயலாமல் குடோன்களில் இருப்பில் உள்ளது இதற்கு மத்திய அரசின் கொள்கையை காரணம் ஆலைகளில் உள்ள சர்க்கரையை விற்பனையை செய்வதற்கு மத்திய அரசு கோட்ட முறை செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன,

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் . மாநில பொருளாளர் பெருமாள், மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சக்திவேல், உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story