அருவிக்கரை ஆற்றில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

அருவிக்கரை ஆற்றில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
அருவிக்கரை சுற்றுலா பகுதி
திருவட்டாரில் உள்ள அருவிக்கரை ஆற்றில் வீண் அசம்பாவிதத்தை தவிர்க்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
குமரி மாவட்டம் திருவட்டாரில் இருந்து அரைக்கிலோமீட்டர் தொலைவில் அருவிக்கரை உள்ளது. இது இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா பகுதியாகும் இந்தபகுதியில் உயர்ந்த பெரிய பாறைகளினூடே தண்ணீர் பலகிளைகளாக பரந்து விரிந்து பாய்கிறது. மேற்பகுதி அருவியையொட்டியுள்ள பகுதி ஆழம் குறைந்த பகுதிகள் ஆழம். ஆனால் சப்தமாதர் கோவிலையொட்டி ஆறு ஓடும்பகுதியில் நெடும்போக்கு கயம் என்ற ஆபத்தான பகுதி உள்ளது. இது கிட்டத்தட்ட 20 முதல் 25 அடி ஆழம் கொண்டது ஆகும். உள்ளூர் வாசிகள் அதிகமாக இங்கே குளிக்கக்கூட வரமாட்டார்கள். ஆனால் நீ வருவாய் என, வருஷம் 16, ராமன் தேடிய சீதை உட்பட பல்வேறு திரைப்படங்களில் இந்த பகுதி இடம்பெற்றுள்ளதாலும்., சோசியல் மீடியாக்கள் மூலமாக அருவிக்கரையின் அழகு வெளியுலகுக்கு அதிகம் தெரிந்து வருவதாலும் இந்த இடத்தைக்காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா வந்தவர்கள் இடத்தின் ஆழம் குறித்து தெரியாமல் இறங்கப்போக அவர்களில் ஒருவர் கடந்த வாரம் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் இந்த ஆற்றின் கரையோரம் எந்த வித எச்சரிக்கை பலகைகள் கிடையாது. இதனால் ஆற்றைப்பற்றி தெரியாமல் வெளியூரில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகல் ஆற்றில் இறங்கி உயிரை இழக்கின்றனர். எனவே இந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story