குப்பை கொட்டும் இடமாக மாறிய வெள்ளகுளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
மாசுபட்ட குளம்
குளத்து நீர் மாசடைந்து கழிவுநீராக மாறியுள்ளதால் வெள்ளகுளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் உள்ள, காமராஜர் நகரில் வெள்ளகுளம் அமைந்துள்ளது. இக்குளத்து நீர் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் இக்குளத்து நீரை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கோவில்களுக்கு அபிஷேகத்திற்காக எடுத்து சென்றுள்ளனர். முறையான பராமரிப்பு இல்லாததால் வெள்ளகுளத்தில் கோரை புற்கள் முளைத்துள்ளன. குளத்தை சுற்றிலும் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதால், வீட்டு உபயோக கழிவுநீர் குளத்தில் நேரடியாக விடப்படுகிறது. அப்பகுதியினர் குளத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், குளத்து நீர் மாசடைந்து கழிவுநீராக மாறியுள்ளது. இதனால், நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது. எனவே, வெள்ளகுளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story