காரைக்குடியில் அம்மா உணவகத்தை முறையாக நடத்த கோரிக்கை

காரைக்குடியில் அம்மா உணவகத்தை முறையாக நடத்த கோரிக்கை

அம்மா உணவகம்

காரைக்குடி அம்மா உணவகத்தை முறையாக நடத்த வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த 2015ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது. புது பஸ் ஸ்டாண்ட், கோர்ட், தாலுகா ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன் என முக்கிய இடங்களுக்கு மத்தியில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. கூலித் தொழிலாளர்கள்,

ஏழை மக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலையில் இட்லி,சாம்பார் அல்லது பொங்கல், மதியம் தயிர்சாதம் மற்றும் சாம்பார் அல்லது புளி சாதம் வழங்கப்படுகிறது.

தினமும் 900க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருகின்றனர். உணவகத்தில் 5 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். பணி செய்யும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.395 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அம்மா உணவகத்தில் நேரத்திற்கு உணவு கிடைக்கவில்லை என்றும் முறையாக உணவு வழங்கப்படவில்லை என்றும் உணவருந்த வரும் மக்கள் பணியாளர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணியாளர்களோ தங்களுக்கு முறையாக செலவினத்தொகை வழங்குவதில்லை அடுப்பு, மின்விளக்கு, உள்ளிட்ட பொருட்களை பராமரிக்க முடிவதில்லை, தங்களது கை பணத்தை போட்டு செலவு செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஏழை மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகத்தை முறையாக பராமரித்து முறையாக உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story