வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
பைல் படம்
கடந்த ஆண்டு டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் அனைத்து தரப்பினரும் கடுமையாக மழை வௌ்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக பல வியாபாாிகள் தங்களது பொருட்களை முழுமையாக இழந்து அவதிக்குள்ளாகினார்கள்.
அதே போல் மாநகராட்சி பகுதி மட்டுமின்றி மாப்பிள்ளையூரணி ஊராட்சி உள்ளிட்ட பல மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பினால் 52 பேர் உயிாிழப்பை சந்தித்தும் கால்நடைகளும் செத்து மிதந்தன. பொதுமக்கள் சாராசாி நிலைக்கு வருவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் ஆகின. வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதின் போில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, பொியசாமி, பொியகருப்பன், ராமசந்திரன், மனோ தங்கராஜ், சக்கரபாணி, மேயர் ஜெகன் பொியசாமி, உள்ளிட்ட பல அதிகாாிகள் முழுமையாக முகாமிட்டு பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் முதலமைச்சரும் நோில் வந்து பார்வையிட்டார். ஆளும் கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாாிகள் என அனைத்து தரப்பினர் என ஓட்டுமொத்தமாக இணைந்து பணியாற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பணி செய்தனர். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு அரசு சார்ந்த உதவிகளை எந்த முறையில் யாருக்கெல்லாம் வழங்கலாம் என்ற கணக்கெடுப்பு உயர்மட்ட அதிகாாிகள் முதல் கிராமத்தில் உள்ள தலையாாி வரை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாாிகளுக்கு வங்கிகள் மூலம் சில லட்சங்கள் வரை வழங்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணம் 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.