மீனவ இளைஞர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரிக்கை: ஜவாஹிருல்லா

மீனவ இளைஞர் குடும்பத்திற்கு  நிதி உதவி வழங்க கோரிக்கை: ஜவாஹிருல்லா

ஜவஹருல்லா 

கடலில் மூழ்கி இறந்த மீனவ இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்க வேண்டும் என ஜவாஹிருல்லா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவ தொழிலாளி ஜாஹிர் உசேன். இவரின் மகன் முஜாஹித் வயது 18. இவரும் மீனவ கூலியாக இருந்து வருகிறார். நேற்று 07.05.2024 பகல் மீனவ இளைஞர் முஜாஹித் மீன்பிடி சாதனம் ஒன்றை மீட்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி காணாமல் போய் விட்டார்.

அருகில் இருந்த மீனவர்கள் பலரும் அவரை மீட்க முயற்சி செய்தும் அவரை காண முடியவில்லை. இதனால் மீனவர் முஜாஹிதின் குடும்பத்தினர் உட்பட முழு பாம்பனும் சோகத்தில் மூழ்கியது. மீனவர்கள் தொடர்ந்து தேடியும் மீனவ இளைஞரை மீட்க முடியவில்லை. இச்சூழலில் இன்று காலை எட்டு மணியளவில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் மீனவர் முஜாஹிதின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இறந்து போன இளைஞர் முஜாஹித் அந்த குடும்பத்தின் ஒரே ஆண்மகன். மீனவ குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கருணை அடிப்படையில் பத்து லட்சம் ரூபாய் கருணை தொகை வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு கடலோரம் சிவப்பு எச்சரிக்கை நிலவும் காலத்தில் திடீரென ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி மீனவ இளைஞர் இறந்துள்ளார்.

எனவே மகனை இழந்த மீனவ குடும்பத்திற்கு கருணை தொகை வழங்கிட முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Tags

Next Story