குளத்தை சுத்தப்படுத்த கோரிக்கை
அனுமந்தபுரம் கிராமத்தில், அகோர வீரபத்திரர் கோவிலுக்கு எதிரேயுள்ள குளத்திலுள்ள குப்பை கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி, மஹா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து, இரவில் தங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர். இந்த கோவிலின் வாயிலுக்கு எதிரே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோவிலில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
குளத்தில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் குப்பை, எலுமிச்சை பழ மாலைகள், அணிந்து வந்த உடைகள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வீசி செல்கின்றனர். குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளதால், முழுதும் குப்பை படிந்து காணப்படுகிறது. மேலும், குளத்தை சுற்றி புற்கள் முளைத்துள்ளதால், அதில் பாசி படிந்து காணப்படுகிறது.இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குளத்தின் நீரை சத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வருகின்றனர்.