செல்லியம்மன் குளத்தில் பாசியை அகற்ற கோரிக்கை

செல்லியம்மன் குளத்தில் பாசியை அகற்ற கோரிக்கை

 குளத்தில் படர்ந்துள்ள பாசி

திருமுக்காடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் உள்ள பாசிகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் கிராமத்திற்கு சொந்தமான செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. செல்லியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன், இக்குளத்து நீரில் கால்களை சுத்தம் செய்து கோவில் பூஜைகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், கோவிலில் நடக்கும் பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் இக்குளத்தின் நீர் பயன்பாடாக உள்ளது. இந்த குளத்தைச் சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து குளம் முழுக்க பாசி படர்ந்துள்ளது. இதனால், நீர் மாசடைந்து குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இக்குளத்தை துார்வாரி சீர் செய்து, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்ற பக்தர்கள் மற்றும் அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story