மதுபாட்டிலில் வீரன் என்ற பெயரை நீக்க கோரிக்கை

மதுபாட்டிலில் வீரன் என்ற பெயரை நீக்க வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் வீரன் என்ற பெயரில் பெயரில் புதிய வகை மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 140 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த மதுபான பாட்டிலுக்கு தலித் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மக்களில் அருந்ததியர் சமூகத்தில் மட்டும்தான் வீரன் என்கிற பெயர் அதிக அளவில் உள்ளது .மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் ஒண்டிவீரன் ,மாவீரன் பொல்லான், மதுரை வீரன் மற்றும் வீரன் சுந்தரலிங்கனார் போன்றவர்கள் பெயர்களில் வீரன் என்கிற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அடையாளமான வீரன் என்கிற பெயரில் மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டியல் இன மக்களை இழிவு படுத்தி கேவலப்படுத்தும் விதமாக இது உள்ளதால் இந்த பெயரை நீக்க வேண்டும், மது பாட்டில் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்று சமூக நீதி மக்கள் கட்சி சார்பில் தலைவர் வடிவேல் ராமன்கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக தமிழக அரசு வீரன் என்ற பெயரில் உள்ள மது பாட்டில்களை கொள்முதல் செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் இல்லையென்றால் அனைத்து தலித் அமைப்புகளும் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று சமூக நீதி மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story