காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

காட்டு பன்றி வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க கோரி கோரிக்கை

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உதியளித்தார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறுவதற்காக வந்திருந்தனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் காட்டு பன்றிகளால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதை காரணம் காட்டி காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து மத்திய மாநில அரசுகள் நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கழுத்தில் கோரிக்கை எழுதிய பதாகையை மாற்றியவாறு மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story