சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை !

சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை !

 கோரிக்கை

திருப்பத்தூரில் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூரில் ரூபாய் 11 கோடி செலவில் மத்திய அரசு நிதியில் செயல்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுமா? மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. வறட்சியான சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையிலும் சிக்கி தவிக்கின்றது. இதனை குறைக்கும் விதமாக கடந்த 2-10-2011 அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காளியம்மன் கோயில் அருகிலும், சந்தை பேட்டை அருகிலும் இரு சுத்திகரிப்பு நிலையங்கள் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ரூ11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ 3க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு காலம் மத்திய அரசும் அதன் பிறகு பேரூராட்சி நிர்வாகமும் பராமரிக்க வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் துவங்கிய இத்திட்டம் 2 ஆண்டுகள் செயல்பட்டன. பின்னர் திருப்பத்தூர் பேரூராட்சியில் போதிய வருமானம், பணியாளர் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக பராமரிக்காமல் விட்டதால் நாளடைவில் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் போனது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்து அதிக விலை கொடுத்தும், நீண்ட தூரம் சென்றும் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள 18 வார்டு மக்களும், சமுக ஆர்வலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை போரூராட்சி நிர்வாகத்திடமும், அப்போதைய அதிமுக அரசிடமும் மனு அளித்தும் கிடப்பில் போடப்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் ரூ11 கோடி செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் புதர் மண்டி பொருட்களும் சேதமடைந்தது. இதனையடுத்து திருப்பத்தூரை சேர்ந்த சமுக ஆர்வலர் பாலா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மனு விசாரணைக்கு வந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் இதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க அரசும் அதிகாரிகளும் முன்வராத நிலையில் நீதிமன்றத்திற்கு சென்று தான் குடிதண்ணீர் பெற வேண்டிய நிலை உள்ளது. மக்கள் வரி பணத்தில் 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால் தூய்மையான குடிநீர் மக்களுக்கு, குறைந்த செலவில் கிடைக்கும் என்பதால் இவ்வழக்கின் தீர்பை திருப்பத்தூர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Tags

Next Story