காட்டாறு பாலத்தை சீர் செய்ய கோரிக்கை!
வெட்டாற்று பாலத்தை சரிசெய்ய கோரிக்கை
மாற்று பாலத்தில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே மீமிசல் உள்ள காற்றாற்றுக் பாலத்தில் முற்பகுதியில் உள்ள செடிகளை அகற்றி மழை நீர் செல்லும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீமிசலில் கடைவீதி அறந்தாங்கி சாலை இடையே கிழக்கு கடற்கரை சாலையில் பெரிய காட்டாறு பாலம் உள்ளது இந்த பாலத்தின் இரு பக்கமும் செடிகள் மண்டி காணப்படுகிறது. இதன் வழியே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வயல் காட்டுப்பகுதியில் இருந்து வரும் உபரி நீர் கடலில் சங்கமிக்கிறது. பாலத்தின் செடிகள் மண்டி மழை நீர் செல்ல தடை ஏற்படுகிறது. இதனால் சுற்றுப்பகுதியில் தண்ணீர் தேங்கிகிறது இந்த நிலையை மாற்று பாலத்தில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து ஆர். புதூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி கூறிய போது இந்த காட்டாறு தொடங்கும் பகுதியில் இருந்து கடலில் முடியும் வரை உள்ள பகுதியில் செடிகளை அகற்றி தங்கு தடை இன்றி மழை நீர் உபரி நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story