சிறுமின் விசை குழாய் சீரமைக்க கோரிக்கை
திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலையில் கடந்தாண்டில் பழுதடைந்த சிறுமின் விசை குழாயை சீரமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலையில் கடந்தாண்டில் பழுதடைந்த சிறுமின் விசை குழாயை சீரமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை ஊராட்சி பள்ளி சாலையில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக அதே தெருவில் ஊராட்சி நிர்வாகம் சிறுமின் விசை குழாய் அமைத்துள்ளது. இந்த பகுதிவாசிகள் வீட்டு உபயோகம், அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளியில் இருப்போர் இந்த நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு, குடிநீர் டேங்கில் நீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட நீர் மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. இதை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதிவாசிகள் வேறு பகுதியில் உள்ள சிறுமின் விசை குழாயை தேடி சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள சிறுமின் விசை குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story