தலக்குளம் பகுதி இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

தலக்குளம் பகுதி இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்துள்ள சாலை 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலக்குளம் வள்ளியாற்று பாலத்தில் இரு பக்கங்களிலும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு வள்ளி ஆற்றின் மேல் சுமார் ரூ.2 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்பட்டது. அத்துடன் இரணியல் முட்டம் வழித்தடத்தில் செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கும் முன்பே சாலை சேதமடைந்து காணப்பட்டது. தற்போது மழைநீர் பள்ளங்களில் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. திங்கள்நகரில் இருந்து வெள்ளிமலை, முட்டம், அம்மாண்டிவிளை செல்லும் மினி பஸ், அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் வள்ளி ஆற்றின் வழியாக செல்லும்போது குண்டு குழியாக உள்ள சாலையில் தள்ளாடியபடி ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே தலக்குளம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story