வில்லுக்குறியில் ஆபத்தான மழைநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்

வில்லுக்குறியில் ஆபத்தான  மழைநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்
குமரி மாவட்டம் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை அடிமடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் வகுப்பு மாணவன் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி இருந்தது. மறுநாள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பத்மநாப புரம் கோட்டாட்சியர் கவுசிக் மழைநீர் ஓடையை சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டு சென்றி ருந்தார். இந்த நிலையில் மாணவன் இழுத்து செல்லப் பட்ட மழைநீர் ஓடை பெயரளவுக்கு மட்டும் சீரமைக்கப்பட்ட தாகவும், எதிரே உள்ள மழைநீர் ஓடை சீரமைக்கப் படாமல் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடைப்பு ஏற்பட்டு சாக்கடை தேங்கி நிற்கும் மழைநீர் ஓடைக்குள் பயணிகள் அவ்வப்போது விழுந்து அடிபட்டு செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தி யாகி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் இந்த மழைநீர் ஓடையை போர்க்கால அடிப்படையில் வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story