சாலையை சீரமைக்க கோரிக்கை
சாலையை சீரமைக்க கோரிக்கை
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு முற்றிலுமாக சிதிலமடைந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். காரைக்குடி பழைய ரயில்வே ஸ்டேஷன் எதிரே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி நடந்தது. பணி முடிந்து பல நாட்கள் ஆகியும் சாலை சரி செய்யப்படவில்லை. காரைக்குடி அழகப்பா பல்கலை சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அரியக்குடி சாலை சந்திக்கும் சந்திப்பு முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. பொதுமக்கள் வந்து செல்லும் ரயில்வே சாலையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story