வெம்பாக்கம் அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை
சாலையை சீரமைக்க கோரிக்கை
வெம்பாக்கம் அருகே குண்டும்,குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவில் எதிரே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் ,மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது.
எனவே கோவில் எதிரே சிமெண்டு சாலை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story