காக்கங்கரை அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை
சிதலமடைந்துள்ள நீர்தேக்க தொட்டி
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிதலமடைந்து எந்த நேரத்திலும் விழுந்து உயிர்சேதம் ஏர்ப்படுவதற்குள் சரி செய்ய அப்பகுதி மக்களை கோரிக்கை! திருப்பத்துர் மாவட்டம் காக்கக்கரை அடுத்த சோளச்சூர் பகுதியில் சுமார்300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தப் பகுதியில் இரண்டு மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. இந்த இரண்டு தொட்டிகளும் சிதலமடைந்துசிமெண்ட் பூச்சி பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது மேலும் ஒரு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கிராம சேவை மையம் மற்றும் பள்ளியின் அருகே அமைந்துள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் மிகப் பெரிய சேதாரம் மற்றும் உயிருக்கு ஆபத்துஏற்படும் அதனை சரி செய்ய வேண்டும் எனவும் அதே போல் மற்றொரு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் விரிசல்களும் கம்பிகள் வெளியே நீட்டியவாறு உள்ளது.
இதன் காரணமாக இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேலே ஏற்றப்படும் தண்ணீர் முழுவதும் வீணாகி வெளியே சென்று விடுகிறது இதன் காரணமாக அப்பகுதி இரண்டு மேல்நிலைப் நீர் தேக்க தொட்டி இருந்தும் மக்கள் தண்ணீருக்கு மிகவும் அவதி உற்று வருகின்றனர்.
எனவே இந்த இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும் சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது