விழுப்புரத்தில் குடிநீர் தொட்டி சீரமைத்து தர கோரிக்கை

விழுப்புரத்தில் குடிநீர் தொட்டி சீரமைத்து தர கோரிக்கை

விழுப்புரத்தில் பழைய குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.


விழுப்புரத்தில் பழைய குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.

விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், சாலை அகரம் ஊராட்சிக்குட்பட்ட தேவநாத சாமி நகரில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 1999ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் பில்லர்களின் கீழ் பகுதியில், காரைகள் பெயர்ந்து விழுந்து, கான்கிரீட் கம்பிகள் தெரிகிறது.

இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.குடிநீர் தொட்டி அருகே பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளதால், அங்கு தினசரி பக்தர்கள், பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ளது. மேலும், சாலையின் ஓரத்தில் குடிநீர் தொட்டி இருப்பதால், இடிந்து விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படும்.எனவே, குடிநீர் தொட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்து, இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story