ஓமனில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க கோரிக்கை

ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராமநாதபுரம் மீனவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி பகுதியில் வசிக்கும் வைரசெல்வம் , ரமேஷ் , முகமது , முத்துகிருஷ்ணன் , சரவணகுமார் ஆகியோர் ஓமன் நாட்டில் அல்மசீரா என்ற இடத்தில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக சென்றுள்ளதாகவும் , தொழிலுக்குச் சென்ற இடத்தில் படகு உரிமையாளர் உரிய கூலி தர மறுத்ததையொட்டி சொந்த ஊர் திரும்பிட பாஸ்போட்களை தர மறுத்து தடை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அவர்களில் குடும்பத்தினர்கள் இணைந்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு வழங்கினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், நாங்கள் மீன்பிடி தொழில் சார்ந்த குடும்பமாகும். எங்கள் பகுதியில் மீன்பிடி மிகவும் நெருக்கடிக்குள்ளானதை தொடர்ந்து குடும்ப வறுமை காரணமாக எனது கணவர் ஓமன் நாட்டில் ஒப்பந்த கூலியாக தொழில் செய்வதற்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் வேலை செய்ததற்கு கூலி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் கேள்வி கேட்டால் நாட்டிற்கு உன்னை அனுப்ப மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் எங்களுக்கு அச்சம் ஏற்படுவதாலும் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத பட்சத்தில் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வழி இல்லாத நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம் எனவே எங்கள் கணவரை மீட்டு எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story