தம்மம்பட்டி-சேலம் இடையே பிற்பகலில் பேருந்து வசதி இயக்க கோரிக்கை

தம்மம்பட்டி-சேலம் இடையே பிற்பகலில் பேருந்து வசதி இயக்க கோரிக்கை
 பேருந்து நிலையம் 
தம்மம்பட்டி-சேலம் இடையே பிற்பகலில் பேருந்து வசதி இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டியில் இருந்து சேலத்துக்கு மதிய நேரத்தில் பேருந்து சேவை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாவட்ட எல்லையில் தம்மம்பட்டி உள்ளது. இங்கிருந்து சேலம் 65 கி.மீ. தூரம் உள்ளது.

தம்மம்பட்டியிலிருந்து சேலத்துக்கு காலை 4.30 மணி முதல் அரைமணி நேரத்துக்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.ஆனால் பிற்பகலில் 12:10 மணிக்கு செல்லும் தனியார் பேருந்துக்கு பிறகு 1.20மணிக்கு செல்லும் தனியார் பேருந்துதான் உள்ளது.

இடைப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்துக்கு சேலம் செல்ல அரசு, தனியார் பேருந்து வசதிகள் இல்லை. இதனால் பிற்பகலில் சேலம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.பயணிகள் நலன்கருதி பிற்ப கலில் பேருந்து வசதி ஏற்படுத்த அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story