அறந்தாங்கி - பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் இயக்க கோரிக்கை!
அறந்தாங்கி - பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
திருமயம்: பொன்னமராவதி சுற்றுவட்டார பகு திகளில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், வேளாண் விளைப்பொருட்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதேபோல் அறந்தாங்கி பகுதியில் இருந்து வேளாண் விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களும் அதிக அளவில் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
பொன்னமராவதியையும், அறந்தாங்கியையும் நேரடியாக இணைக்கும் வகையில் பஸ் போக்குவரத்து இல்லை. இதனால் 2 பகுதி மக்களும் புதுக்கோட்டை வந்து பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகிறது. இதை தவிர்க்க அறந்தாங்கியில் இருந்து கே. புதுப்பட்டி, அரிமளம், செங்கீரை, லெம்பலக்குடி, விராச்சிலை,பனையப் பட்டி, குழிபிறை வழியாக பொன்னமராவதிக்கு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அறந்தாங்கியில் இருந்து மேலே குறிப்பிட்ட வழியாக பொன்னமராவதி செல்லும் சாலை தரமானதாக உள்ளது. எனவே இந்த புதிய வழித்தடத்தில் அரசு போக்குவரத்து க்கழகம் பஸ் இயக்க வேண்டும். கிராமங்கள் வளர்ச்சி யடையும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.