ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய கோரிக்கை

ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய கோரிக்கை

பைல் படம்

கொப்பரை தேங்காய்க்கு நிரந்தரமான விலை கிடைக்க, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழநி, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 31,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி தேங்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில், தேங்காய்களை உலர்த்தி கொப்பரைகளான பின்பு, அதை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளுக்கு விவசாயிகள் அனுப்புகின்றனர்.

தற்போது தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை தினமும் சரிவடைந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கிறது. அதேபோல், கொப்பரை தேங்காய்க்கு நிரந்தரமான விலை கிடைக்க, தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story